அந்த இடம் அப்படி இருக்குனு சொன்னாங்க; தனிமையிலதான் இருக்கேன் - நடிகை கனகா வேதனை!
நடிகை கனகா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கனகா
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கனகா. இவர் 'கரகாட்டக்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே கனகாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த கனகா படவாய்ப்புகள் குறையவே, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். கடந்த 23 ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை குட்டி பத்மினி பகிர்ந்திருந்தார். அதில் அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்தார். கனகாவை அந்த புகைப்படத்தில் பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
பேட்டி
இதற்கிடையில் நடிகை கனகா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், தான் நடிக்க வந்தபோது தன்னை பார்த்து என்னம்மா கன்னம் ஒட்டிப் போயிருக்கிறதே, ஒல்லியாக இருக்கிறாய் என்று பலரும் விமர்சித்ததாகவும், டயலாக் இப்படி பேச வேண்டும் என்றெல்லாம் கற்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்பொழுது நாயகிகள் கேஷுவலாக நடிப்பதாகவும் அதையும் ரசிகர்கள் ரசிப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், தான் இன்னும் அதே வீட்டில் தனிமையில்தான் இருப்பதாகவும் மற்றவர்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்ற எண்ணம் தனக்கு கிடையாது என்றும் தான் என்ன பிசியாக இருக்கிறோம் எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய மனசாட்சி கேள்வி கேட்கும் என்றும் அதனால்தான் ஒதுங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan