எனக்கு அப்போ 8 வயது.. நான் தூங்கும்போது அவர் பாலியல் ரீதியாக அணுகினார் - கல்யாணி ஓபன் டாக்!
நடிகை கல்யாணி தனது சிறுவயது அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
விஜே கல்யாணி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி, அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. பின்னர், இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், "எனக்கு 8 வயது இருக்கும்பொழுது ஒரு மியூசிக் டைரக்டர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார். நான் தூங்கிக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் பண்ணுவார். அவர் என்னுடைய அம்மாவின் நெருங்கிய நண்பர் என்பதால் என்னால் எதுவும் சொல்லமுடியாது. அந்த வயதில் கூறினாலும் நம்பமாட்டார்கள்.

அம்மாவின் முன்னால் அந்த நபர், என்னிடம் மிகவும் பாசமாக பழகுவார். என்னுடைய அம்மாவும் அவரை, அவரின் தம்பி போல பாவித்தார். நான் இந்த விஷயத்தை, எனது அம்மா இறக்கும் வரை அவரிடம் சொல்லவே இல்லை" என்று கூறியுள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    