நடிகர் சூர்யாவை விவகாரத்து செய்கிறாரா? பதிலடி கொடுத்த ஜோதிகா!
விவாகரத்து சர்ச்சைக்கை நடிகை ஜோதிகா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விவாகரத்து சர்ச்சை
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறியிருக்கிறார்.
ஜோதிகா பதிலடி
இந்நிலையில், ஜோதிகா படங்கள் நடிப்பதில் சூர்யாவுக்கு ஜோதிகாவுக்கும் தொடர்ந்து நிறைய விவாதங்கள் வந்து கொண்டிருப்பதால், விவாகரத்து வரை சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசியுள்ள ஜோதிகா, “குழந்தைகளின் படிப்பு முக்கியம்.
அதனால்தான், இருவரும் அங்கு சென்றோம். மற்றபடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை வந்து கொண்டுதான் இருக்கிறோம். குடும்பத்தால் பிரச்சினை என்பதெல்லாம் பொய்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புதுவருடத்திற்கு தன் கணவர் சூர்யாவுடன் பின்லாந்து பயணம் சென்ற வீடியோவைப் பகிர்ந்து தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
