குடும்பத்தைப் பிரிந்து மும்பையில் செட்டில்? இதற்காகத்தான்.. உண்மை உடைத்த நடிகர் சூர்யா!
மும்பையில் செட்டில் ஆகியதாக பரவிய செய்திக்கு சூர்யா விளக்கமளித்துள்ளார்.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை செட்டில்..
தற்போது இதுகுறித்து பேசிய சூர்யா, “ சோசியல் மீடியாவில் நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேன் என்று சொல்றாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. இரண்டு குழந்தைகளும் மும்பையில படிக்கிறாங்க.
அவங்கள பார்க்குறதுக்காகத்தான் அப்பப்ப அங்க போய்ட்டு வர்றேன். மற்ற படி நான் சென்னையிலதான் இருக்கேன். நமது குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருந்து அதுலையும் ஜெயிக்கணும்.
மனைவிக்கு நல்ல கணவனா இருந்து அதுலையும் ஜெயிக்கணும். இப்படி எல்லாத்தளங்களிலுமே நீங்க ஜெயிக்கணும்” எனத் தெரிவித்துள்ளார்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
