தனிமையில் வாழ்க்கையை இழந்த நடிகை - பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி மறைவு!

Tamil Cinema
By Sumathi Oct 05, 2023 04:28 AM GMT
Report

இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஜெயதேவி

1976ம் ஆண்டு தனது 20 வயதில் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஜெயதேவி(65). இதயமலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் உள்ளிட்ட 20 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

தனிமையில் வாழ்க்கையை இழந்த நடிகை - பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி மறைவு! | Actress Jayadevi Passed Away

15 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இவர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் வேலு பிரபாகரன் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்தினார். புரட்சிக்காரன் என்ற படத்தில் எழுத்தாளராகப் பணியாற்றிய போது, ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான வேலு பிரபாகரனுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் உயிரிழப்பு - சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!

பிரபல டான்ஸ் மாஸ்டர் உயிரிழப்பு - சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!

மறைவு

சில வருடத்திலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று பிரிந்தனர். தன்பின் வேலு பிரபாகரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஜெயதேவி திருமணம் செய்யாமல், பல ஆண்டுகளாக முரளி என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

தனிமையில் வாழ்க்கையை இழந்த நடிகை - பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி மறைவு! | Actress Jayadevi Passed Away

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.