புகழ் பெற்ற பிரபல பாடகி உடல் நலக்குறைவால் காலமானார்
புகழ் பெற்ற பிரபல பாடகி சுமித்ரா சென் உடல் நலக்குறைவால் காலமானார்.
பிரபல பாடகி உயிரிழப்பு
கடந்த 40 ஆண்டுகளாக புகழ் பெற்ற பாடகி சுமித்ரா தனது இனிமையான குரல் வளத்தால், வங்காள மொழியை மேலும் இனிக்க செய்து வந்தார்.
கடந்த சில வருடங்களாகவே மூச்சுக்குழாய் நிமோனியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் இதற்காக கொல்கத்தாவில் உள்ள தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர்.
வயது மூப்பு காரண சிகிச்சை பலனளிக்காமல் சுமித்ரா சென் இறந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார் , வயதானாலும் கூட அவரது குரலுக்கு வயதாகவேயில்லை.
மம்தா பேனர்ஜி இரங்கல்
உடல்நிலை குன்றும் வரையில், ரசிகர்களுக்காக பாடிக் கொண்டிருந்தார் 2012ல் மேற்கு வங்கத்தின் "சங்கீத் மகா சம்மான்" விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமித்ரா சென் மறைவுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது பல தசாப்தங்களாக ரசிகர்களை ஆட்கொண்ட பாடகி சுமித்ரா மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.
நீண்டகாலமாக அவருடான் பழகி உள்ளேன் இசை உலகத்திற்கிக்கு இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாது . அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆளத்த இரங்கலை தெரிவித்து கொள்ளகிறேன் என்றார் .