பிரபல நடிகை திடீர் மரணம்; அறுவை சிகிச்சையால் நேர்ந்த சோகம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை ஜாக்குலின் கேரியரி மரணமடைந்துள்ளார்.
ஜாக்குலின் கேரியரி
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் நடிகை ஜாக்குலின் கேரியரி (48). லத்தீன், அமெரிக்க சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர் பிரபல மாடலாகவும் இருந்தார்.
கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற அழகுப்போட்டியில் ஜாக்குலின் கேரியரி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் இளமைத் தோற்றத்தை அழகுபடுத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ததால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாக்குலின் கேரியரி கலிபோர்னியாவின் லாஸ் எஞ்சலில் உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாவது "இன்று எங்களைப் பின்தொடர்பவர்களுக்கு சோகமான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
காலமானார்
1996-ல் புன்டா டெல் அகுவா மாவட்டத்தின் அழகுராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாக்குலின் கேரியரி காலமானார். இந்த கடினமான தருணத்தில் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சில நாட்களுக்கு முன்பு வரை ரோமா தியேட்டரில் நடத்தப்பட்ட எங்கள் நாடகத்தில் அவர் அற்புதமாக நடித்தார். ஜாக்குலின் கேரியரி பூட்டிக் என்ற உயர்தர பேஷன் கடையும் வைத்திருந்தார்.
காஸ்மெடிக் சர்ஜரியால் ஏற்பட்ட பக்கவாதத்தால் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் காலமானார்" என்று பதிவிடப்பட்டிருந்தது. நடிகை ஜாக்குலின் கேரியரின் மறைவு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.