Friday, May 2, 2025

ஜாலியன் வாலாபாக்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

United Kingdom World
By Jiyath 2 years ago
Report

ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கொலை முயற்சி

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 'ஜஸ்வந்த் சிங் சைலு' என்பவர் வசித்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு இவர் அந்நாட்டின் 'பக்கிங்ஹாம்' அரண்மனைக்குள் முகமூடி அணிந்து சட்ட விரோதமாக நுழைந்துள்ளார்.

ஜாலியன் வாலாபாக்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Indian Hatched Plot Kill Queen Elizabeth To Jail

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் கூறியதாவது "1919-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு' பழிவாங்க மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில்தான் அங்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்து மனநல பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இங்கிலாந்து நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஜாலியன் வாலாபாக்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Indian Hatched Plot Kill Queen Elizabeth To Jail

இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. இதனால் அவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.