உலக கோப்பையை தட்டித்தூக்கிய அர்ஜென்டினா: பொது விடுமுறை - அதிரடி!
உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில், அர்ஜென்டினாவில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிக் கோப்பை
அர்ஜென்டினா 38 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை கால்பந்து தொடரை வென்றுள்ளது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பை உடன் அர்ஜென்டினா கால்பந்து அணியினர் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இலவச பிரியாணி, இலவச சூப், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அட்டகாசமான ஆஃபர், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொது விடுமுறை
இதற்கிடையில் இன்று நண்பகல் தலைநகர் பியூனஸ் ஐரிஸில் உள்ள தேசிய நினைவு சின்னமான Obelisco de Buenos Aires-க்கு உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து அணியினர் வருகை புரியவுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று ஒருநாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் என குறிப்பிட்டுள்ளது.