உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா; கோடிகளை அள்ளிக்கொடுத்த கத்தார் - திகைத்துப்போன ரசிகர்கள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றை இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
விறுவிறுப்பாக சென்ற இறுதி போட்டி
22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 32 நாடுகள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில் இறுதி போட்டிக்கு அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் தேர்வாகின.
இந்த நிலையில் இறுதி போட்டி நேற்று இரவு லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்றது. இறு அணிகளும் கோப்பையை வெல்ல முனைப்புடன் விளையாடிய நிலையில் ஆட்டம் பரபரப்பாக சென்றது.
விறுவிறுப்புடன் ஆட்டம் சென்ற நிலையில் 90 நிமிடங்களில் 2-2 என்ற சமநிலையில் இருந்தது. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
108வது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடித்தார். 118 வது நிமிடத்தில் கோல் பகுதியில் நின்ற அர்ஜென்டினா வீரர் மோன்டியல் பந்தை கையால் தடுத்ததால் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் எம்பாப்பே கோல் போட்டார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் என்ற மகத்தான சாதனையையும் 23 வயதான எம்பாப்பே படைத்தார்.
கோப்பையை வென்ற அர்ஜென்டினா
கூடுதலாக வழங்கப்பட்ட நேரதிலும் இரு அணிகளும் 3 - 3 என்ற கணக்கில் சமமாக இருந்த நிலையில் இறுதி முடிவுக்காக பொனல்டி ஷுட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இதை சமார்த்தியமாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா தங்களுக்கு வழங்கப்பட்ட 4 வாய்ப்புகளையும் கோலாக மாற்றி அசத்தியது.
பின்னர் பிரான்ஸ் அணி தங்களுக்கு வழங்கப்பட்ட 4 வாய்ப்புகளை 2 வீணடித்தது. இதையடுத்து அர்ஜென்டினா அணி 4 -2 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.
அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்வது இது 3வது முறையாகும் இதற்கு முன்பு 1978, 1986 ஆம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற நிலையில் தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை கைப்பற்றி அசத்தியுள்ளது.
ரூ.348 கோடி பரிசுத்தொகை
மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பையை போட்டியான இதில் கோப்பையை வெல்ல வேண்டுமு் என்ற அவரின் கனவு நனவானது.
இதையடுத்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற நிலையில் அந்நாட்டில் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு பரிசு தொகையாக ரூ.347 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.248 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
The moment when a dream becomes reality ?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 18, 2022