அவருடன் அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்; ஆனால்.. நடிகை இனியா ஓபன் டாக்!
நடிகை இனியா திரை அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை இனியா
தமிழில் பாடகசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இனியா. பின்னர், விமலுடன் சேர்ந்து வாகை சூட வா என்ற படத்தில் நடித்தார், அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.

அதன்பிறகு யுத்தம் செய், மாசாணி, சென்னையில் ஒரு நாள், பொட்டு, ரைட்டர், திரைக்கு வராத கதை, நான் கடவுள் இல்லை என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரன் எனும் புதிய படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.
திரை அனுபவம்
அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர். அதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இனியா,

" இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் ஜேம்ஸ் கார்த்திக் சினிமாவுக்கு புதிது என்பதால் அவருடனான நடிக்க வேண்டிய பல காட்சிகளில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு சீனிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி என்னையே ஆச்சரியப்பட வைத்து விட்டார் ஜேம்ஸ் கார்த்திக்.
அவர் தான் அதிக டேக் எடுப்பார் என்று நினைத்தேன் ஆனால் நான் தான் அதிக டேக் எடுத்தேன், அவர் டெடிகேட்டட் ஆக நடித்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil