ஷூட்டிங் ஸ்பாட்லேயே ஓப்பனா கேட்டாங்க!! ரொம்ப அப்செட் ஆனேன்!! வருத்தத்துடன் சொன்ன இனியா!!
நடிகை இனியா தனது திரையுலகை வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இனியா
தமிழில் பாடகசாலை, யுத்தம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், விமல் நடிப்பில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்ற "வாகை சூடவா" என்ற படத்தின் மூலம் தமிழில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இனியா. தொடர்ந்து மௌன குரு, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன் போன்ற நடித்துள்ளார்.

மலையாளத்திலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தனது திரை உலக அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில்,வாகை சூடவா படத்திற்கு பின்னரும் தனக்கு பெரிதாக கவனம் ஈர்க்கும் படங்கள் அமையவில்லை என்றும் தன்னை இயக்குநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் சரிவர பயன்படுத்தவில்லை என்றார்.
அப்செட் ஆனேன்
தன்னுடைய ஆரம்பக்கட்டத்தில் திரைப்படத்திற்கான ஆடிஷனுக்கு சென்று இருந்த போது, தன்னுடைய தோல் கலராக இல்லை என நீக்கினார்கள் என்பதால் தான் மிகவும் அப்செட்டானேன் என கூறிய இனியா, தன்னை ஏன் நீக்கினார்கள் என்ற கேள்வி தனக்கு எழுந்தது என்றார்.

ஆனால் அதற்காக தான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என கூறி, நமக்கு திறமை இருந்தால், அது நிச்சயமாக பேசப்படும் நம்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன்னிடம் சிலர் adjustment'டிற்கு அழைத்தார்கள் என கூறி, இது சில நேரங்களில் போன் வழியாகவும் சில நேரங்களில் படப்பிடிப்பில் நடந்து இருக்கிறது என வருத்தத்துடன் தெரிவித்தார்.
சினிமாத்துறையில் மட்டுமின்றி இது எல்லா துறைகளிலும் இருக்கிறது என சுட்டிக்காட்டி, அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது என்றார் நடிகை இனியா.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil