படிக்கணும்'னு கேட்டேன்...13 வயசுல முதல் படம் sign பண்ணேன்" வைரலாகும் தமன்னா வீடியோ!!
நடிகை தமன்னா அவரது ஆரம்பக்கட்டத்தில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
தமன்னா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வளம் வருபவர் தமன்னா.
இரு மொழிகளிலும் உள்ள அனைத்து டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ள அவர், அண்மையில் வெளியான் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
13 வயசுல கையெழுத்திட்டேன்
தற்போது ஹிந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, நடிக்க துவங்கிய புதிதில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தான் பள்ளியில் படித்து வருவதாக கூறிய தமன்னா, தான் 2005இல் தான் 10-ஆம் தேதி தேர்வு எழுதவுள்ளேன் என்று தெரிவித்து, தேர்வுக்காக தயாராகி வருவதாக பேசினார்.
முதல் படத்துக்கான ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திடும்போது தனக்கு 13 வயது தான் ஆகியிருந்தது என்று கூறினார். அந்த பேட்டி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
