நாங்க தாசிகள்னா..ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்? எங்களுக்கும் ஆசை..கொந்தளித்த நடிகை!

Tamil Cinema Tamil TV Serials
By Sumathi Mar 18, 2024 05:30 PM GMT
Report

பெண்கள் நிலை குறித்து நடிகை தீபா பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை தீபா 

‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா சங்கர். அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.

comedy actress deepa

அதன்பின், ‘குக் வித் கோமாளி’யில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தீபா, இளம்வயதில் கணவரை இழந்த ஒரு பெண் யாருடனாவது போய்விட்டால் அவருக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள்.

டிவியில் பின்னாடி என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? அவ்வளவு சித்ரவதை - நடிகை தீபா பகீர்!

டிவியில் பின்னாடி என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? அவ்வளவு சித்ரவதை - நடிகை தீபா பகீர்!

பெண்கள் நிலை

நீங்கள் நான்கு பேர் சேர்ந்து அவருக்கு மறுமணம் செய்து வையுங்களேன். ஏன் அதை செய்யவில்லை. நாங்கள் பாட்டு பாடக்கூடாது, ஆடக்கூடாது, ஓடக்கூடாது, சிரிக்கக்கூடாது. இதெல்லாம் உங்களுக்கு கௌரவ குறைச்சல். சின்ன சின்ன ஆசைகள் எங்களுக்கும் இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?

நாங்க தாசிகள்னா..ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்? எங்களுக்கும் ஆசை..கொந்தளித்த நடிகை! | Actress Deepa About Woman Life Viral Speech

நாங்கள் தாசிகள் என்றே வைத்துக்கொள்வோம். அந்த நிலைக்கு அப்படி மாற்றிய நீங்கள் யார். ஊரில் கரகாட்டக்காரியை ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார். நாங்கள் தாசிகளே ஆனாலும் நடித்து எங்கள் பிள்ளைகளை காப்பாற்றிவருகிறோம். உங்களைப் போல் குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லையே.

யார் குடும்பத்தை கவனிக்கவில்லையோ, பெண்களை மோசமான நிலைமைக்கு தள்ளுகிறானோ அவனைத்தான் சொல்கிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்களே கிடையாது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.