டிவியில் பின்னாடி என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? அவ்வளவு சித்ரவதை - நடிகை தீபா பகீர்!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து நடிகை தீபா பேசியுள்ளார்.
நடிகை தீபா
‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா சங்கர். அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின், ‘குக் வித் கோமாளி’யில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில், சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தீபா பேசுகையில், டிவியில் எல்லாம் குழந்தை ஸ்டான்ஸ் ஆடறாங்க, பாட்டு பாடறாங்க.
தொலைக்காட்சி நிகழ்ச்சி
நான் கண்ணால பார்த்திருக்கிறேன். அந்த குழந்தைகளை அந்த தாய்மார்கள் எத்தனை சித்ரவதை செய்கிறார்கள் என்று. குழந்தைகளின் மனநிலை பாதிக்கிற அளவுக்கு சித்ரவதை செய்கிறார்கள். என் குழந்தை உலகத்திலேயே பெரிய ஆளா வரணும்.
இயற்கையிலேயே குழந்தைகளுக்கு திறமை இருந்தால், இயற்கையிலேயே குழந்தைகளுக்கு பாடக் கூடிய திறமை இருந்தால், யாரும் மறைக்க தேவையில்லை.
எப்படி இருந்தாலும் அது வெளியே வந்துவிடும். தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் என்பது உங்கள் கையில் இருக்கும் குரங்கு பொம்மையல்ல. நீங்கள் சொல்வது போல் எல்லாம் ஆடுவதற்கு என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.