அந்த டாப் நடிகருக்கு ஜோடியாக 6 லட்சம் ஏமாத்திட்டாங்க.. கைய புடிச்சிட்டே உயிர் போச்சு - நடிகை தீபா வேதனை!

Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath Nov 23, 2023 03:30 PM GMT
Report

நடிகை தீபா தனது வாழ்க்கையில் நடந்த சோகங்கள் மற்றும் உணர் பூர்வமான தருணங்களை பற்றி பேசியுள்ளார்.

நடிகை தீபா

'மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா. தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ் என பல முன்னணி சேனல் சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியல்கள் மட்டுமல்லாமல் சினிமாவிலும் தீபா கலக்கி வருகிறார்.

அந்த டாப் நடிகருக்கு ஜோடியாக 6 லட்சம் ஏமாத்திட்டாங்க.. கைய புடிச்சிட்டே உயிர் போச்சு - நடிகை தீபா வேதனை! | Actress Deepa Shankar About Her Mother

மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, மண்டேலா, கடைசி விவசாயி, வீட்ல விஷேசம், தண்டட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் தீபாவின் நகைச்சுவையான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது.

எப்போதும் கலகலப்பாக, ஜாலியான ஒரு நபராக இருந்து வரும் தீபாவை பலரும் தீபா அக்கா என்றே அழைக்கின்றனர். அண்மையில் இவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தனது வாழ்க்கையில் நடந்த சோகங்கள் மற்றும் உணர் பூர்வமான தருணங்களை பற்றி பேசியுள்ளார்.

அவன் என்மேல சாஞ்சு.. அந்த இடத்துலயே அடிச்சிட்டு ஓடிட்டான் - கீர்த்தி சுரேஷ் வேதனை!

அவன் என்மேல சாஞ்சு.. அந்த இடத்துலயே அடிச்சிட்டு ஓடிட்டான் - கீர்த்தி சுரேஷ் வேதனை!

பேட்டி

தீபா பேசியதாவது "என்னுடைய அம்மா தான் நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்ட நபர். அவர் உயிரோடு இருக்கிற வரைக்கும் நான் நல்லா வர வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டார்.

அந்த டாப் நடிகருக்கு ஜோடியாக 6 லட்சம் ஏமாத்திட்டாங்க.. கைய புடிச்சிட்டே உயிர் போச்சு - நடிகை தீபா வேதனை! | Actress Deepa Shankar About Her Mother

என் கைய புடிச்சிட்டு தான் எங்க அம்மாவோட உயிர் போச்சு. இப்போதும் நான் சொல்றேன் நான் இந்த அளவுக்கு பெயரும் புகழோடு இருப்பதற்கு இறந்து எங்க அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணிக்கிட்டு இருக்கிறதுனால தான்.

நான் ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் போது ஒரு சிலரிடம் நடிக்க வேண்டும் என்று ஏமாந்து இருக்கிறேன். அப்போது ஒருத்தன் என்னிடம் நீங்க அப்பாஸுக்கு ஜோடியா நடிக்கணும். அதனால 9 லட்சம் ரூபாய் வேணும் என்று ஏமாற்றி இருந்தான். இது போல யாரும் ஏமாறக்கூடாது" என்று தீபா பேசியுள்ளார்.