கணவருடன் விவாகரத்து; தனிமையில் வாழ்க்கை? மெளனம் உடைத்த பாவனா!

Bhavana Gossip Today Divorce
By Sumathi Aug 26, 2024 05:30 PM GMT
Report

விவாகரத்து குறித்த வதந்திக்கு நடிகை பாவனா விளக்கமளித்துள்ளார்.

நடிகை பாவனா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வலம் வந்தவர் நடிகை பாவனா. இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர். மேலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

actress bhavana

அவருக்கும், தயாரிப்பாளர் நவீனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2018ல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் பாவனாவுக்கும், நவீனுக்கும் விவாகரத்தாகிவிட்டது என செய்திகள் பரவியது.

காருக்குள் பாவனா அனுபவித்த மரண வேதனை - திடுக்கிடும் சம்பவம்!

காருக்குள் பாவனா அனுபவித்த மரண வேதனை - திடுக்கிடும் சம்பவம்!

விவாகரத்து?

தொடர்ந்து, பாவனா தன் கணவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவது இல்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாவனா, என் தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வது இல்லை.

bhavana with husband

என் கணவரும், நானும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நான் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்வது இல்லை. அதனால் நான் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இருந்துட்டு போட்டும்.

நீங்கள் நினைப்பது தவறு என நான் ஏன் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் அப்படி நினைப்பதால் என் கணவரை அழைத்து புகைப்படம் எடுத்து அதை நான் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.