பெண்களின் திருமணம் தொடர்பான சர்ச்சை பதிவு - நடிகை பாமா விளக்கம்!

Tamil Cinema Indian Actress Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jul 20, 2024 12:20 PM GMT
Report

திருமணம் தொடர்பான சர்ச்சை பதிவுக்கு நடிகை பாமா விளக்கம் அளித்துள்ளார். 

நடிகை பாமா

எல்லாம் அவன் செயல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகையான பாமா. தொடர்ந்து சேவற்கொடி, ராமானுஜன் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

பெண்களின் திருமணம் தொடர்பான சர்ச்சை பதிவு - நடிகை பாமா விளக்கம்! | Actress Bhamaa Post Questions About Marriage

இவர், கடந்த 2020-ம் ஆண்டு அருண் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கடந்த மே மாதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது மகளின் போட்டிவை பகிர்ந்த பாமா "இனி நான் சிங்கிள் மதர்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் கணவரை பிரிந்தது தெரியவந்தது.

என்ன வேணாலும் பேசுவீங்களா..? இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குறீங்க - கொந்தளித்த ராதிகா!

என்ன வேணாலும் பேசுவீங்களா..? இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குறீங்க - கொந்தளித்த ராதிகா!

திருமணம் தேவையா? 

இந்நிலையில் பாமா வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. அதில், "பெண்களாகிய நமக்கு திருமணம் தேவையா? வேண்டாம். தங்கள் பணத்தை கொடுத்து எந்த பெண்ணும் திருமணம் செய்யக் கூடாது. உங்களை கைவிட்டுவிட்டால் என்னவாகும்?

பெண்களின் திருமணம் தொடர்பான சர்ச்சை பதிவு - நடிகை பாமா விளக்கம்! | Actress Bhamaa Post Questions About Marriage

உங்கள் பணத்தை பறித்துக்கொண்டு தற்கொலைக்கு தள்ளுவார்கள். உங்கள் வாழ்க்கைக்குள் வருபவர் எப்படி நடத்துவார் என்பது தெரியாமல் ஒரு பெண் திருமணம் செய்யக் கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சர்ச்சையான நிலையில் நடிகை பாமா அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் கூறியது வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டாம் என்றுதான். பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது என கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.