என்ன வேணாலும் பேசுவீங்களா..? இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குறீங்க - கொந்தளித்த ராதிகா!
தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு யார் உரிமை தந்தது? என நடிகை ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராதிகா சரத்குமார்
இயக்குநர் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் பல சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளார். இது போதாதென அரசியலிலும் களமிறங்கி முக்கிய பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், ராதிகா சரத்குமாரின் குடும்ப விஷயங்கள் பற்றி அடிக்கடி இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து சமீபத்தில் நடந்த விகடன் சின்னத்திரை விருதுகள் விழாவில் அவர் பேசியுள்ளார். ராதிகா கூறியதாவது "நாங்க பிரபலமாக இருக்கிறோம் என்பதற்காக என்ன வேணாலும் பேசலாம் என ஒரு சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் நடித்த படத்தை பிடிக்கவில்லையெனில் அது பற்றிப் பேசுங்கள்.
யார் உரிமை தந்தது?
இல்ல அந்த படத்தில் எங்களுடைய கேரக்டர் உங்களுக்கு பிடிக்கவில்லையா? அது பற்றிப் பேசலாம். காரணம், நீங்கள் பணத்தை செலவழித்து எங்களுடைய படத்தை பார்க்கிறீர்கள். அதற்காக பேசலாம்.
ஆனால், எங்களுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு யார் உரிமையை தந்தது? பிரபலங்கள் என்றால் நீங்கள் என்ன வேணாலும் பேசலாம், நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்போம் என்று இருக்கிறதா? இணையத்தில் முகத்தை வெளியே காட்டாமல் என்ன வேணாலும் பேசலாம்.
எவ்வளவு கீழ்த்தரமாகவும் பேசலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் ஒருவரை தவறாக பேசி விட்டோம் அதனால் அவர்கள் அதையே நினைத்து உடைந்து போய் விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி முகத்தையே காட்டாமல் கண்ட மேனிக்கு பேசுபவர்களை பற்றி எங்களுடைய மனதில் ஏற்றிக் கொள்வது கிடையாது" என்று தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.