பலருடன் உறவில் இருந்துருக்கேன்; டார்ச்சர் செஞ்சுருக்காங்க - நடிகை அதிதி பாலன் பளீச்!
தனது ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை அதிதி பாலன் மனம் திறந்துள்ளார்.
அதிதி பாலன்
தமிழில் அருவி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன்(33). மலையாளத்தில் கோல்டு கேஸ், படவேட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ள்ளியில் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன். பக்கத்து ஸ்கூல் பையனை சைட் அடிக்க அந்த ஏரியாவுல தான் சாக்லேட், பிஸ்கட் நல்லா இருக்கும்னு போய்ட்டு வருவேன்.
காதல் சிக்கல்
2 மாதத்திலேயே அந்த முதல் காதல் பிரேக்கப் ஆகி விட்டது அதன் பின்னர் பலருடன் காதல் கொண்டேன். நிறைய ரிலேஷன்ஷிப், பிரேக்கப். காதலில் முக்கியமானதே டார்ச்சர் பண்ணக் கூடாது. ஒருத்தருக்கு பிடித்தது போல இன்னொருத்தரை மாற்ற முயற்சிக்கக் கூடாது. சில உறவுகளில் என்னை டார்ச்சர் செய்துள்ளனர்.
சிலரை நான் டார்ச்சர் செய்ததன் விளைவு தான் பல பிரிவுகளுக்கு காரணம். இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்களுக்கு மோசமான கமெண்ட்டுகள் வரும் நான் கண்டுக் கொள்ள மாட்டேன். ஆனால், அதையெல்லாம் என் அப்பா பார்த்து படிச்சிட்டு ரிப்ளை பண்ணுவார்.
நான் எதுக்குப்பா டைம் வேஸ்ட் பண்றேன்னு சொல்வேன். ஆனால், அவர் ரொம்பவே சென்சிடிவ் யாராவது கொஞ்சம் அசிங்கமா கமெண்ட் போட்டாக்கூட ரொம்பவே அப்செட் ஆகிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video