நடிகை அதிதி பிரபல நடிகருடன் காதலா? - ரியாக்ஷனில் ரிலேசன்ஷிப்பை உறுதி செய்த நடிகை!

Siddharth Aditi Rao Hydari
By Vinothini May 22, 2023 06:29 PM GMT
Report

பிரபல நடிகை அதிதி ராவ் பிரபல நடிகருடனான தனது காதலை அவரது ரியாக்ஷனால் உறுதி செய்துள்ளார்.

அதிதி ராவ்

பிரபல நடிகையான அதிதி ராவ் தமிழில் சிருங்காரம் என்ற படம் மூலம் அறிமுகமானாலும், காற்று வெளியிடை என்ற திரைப்படம் தான் இவருக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இவர் மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார்.

actress-aditi-rao-about-her-relationship

தற்பொழுது தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இவர் இதற்குமுன், சத்யதீப் மிஸ்ரா என்பவரை ரகசியமாக திருமணம் செய்திருந்தார் தற்போது சித்தார்த்துடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.

காதல்

இந்நிலையில், இவரும் நடிகர் சித்தார்த்தும் பொது இடங்களில் ஒன்றாக தான் வருகின்றனர்.

actress-aditi-rao-about-her-relationship

அதேபோல், பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மகளின் திருமண நிச்சயதார்த்தம் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகவே சென்றனர்.

மேலும், அடிக்கடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகின்றனர்.

இதனால் இவரிடம் ஒரு நிகழ்ச்சியில் சித்தார்த்துடனான காதல் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் வெட்கப்பட்டு, தனது வாயையும் பாதி முகத்தையும் மூடிக்கொண்டு கியூட்டாக ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

இந்த ரியாக்‌ஷனை பார்த்த நெட்டிசன்கள் மெளனம் சம்மதமா என அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனாலும் அவர் இது குறித்து அதிகார பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.