மாப்பிள்ளை யார் தெரியுமா? திருமணம் குறித்து முதல்முறை வாய் திறந்த அதிதி!

Aditi Shanker
By Sumathi Aug 09, 2023 05:30 PM GMT
Report

தனது திருமண வதந்திக்கு நடிகை அதிதி சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதிதி சங்கர்

விருமன் படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர்(26). தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்திருந்தார்.

மாப்பிள்ளை யார் தெரியுமா? திருமணம் குறித்து முதல்முறை வாய் திறந்த அதிதி! | Aditi Shankar Talk About Her Marriage

இதனையடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில், இவருடைய திருமணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திருமணம்?

மேலும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிதி எவ்வளவு படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும் ஷங்கர் கூறியுள்ளதாக தகவல் பரவியது.

மாப்பிள்ளை யார் தெரியுமா? திருமணம் குறித்து முதல்முறை வாய் திறந்த அதிதி! | Aditi Shankar Talk About Her Marriage

அதனைத் தொடர்ந்து, அதிதி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், நான் ரொம்பவும் எதிர்ப்பார்க்கிறேன், யார் அந்த மாப்பிள்ளை என்று இப்போது தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி பதிலடி கொடுத்து திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.