இணையதளத்தில் தீயாய் பரவும் நடிகை அதிதியின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்...! - வாயடைத்த ரசிகர்கள்
ஷங்கரின் மகள் அதிதி
தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர் தான் என்று சொல்வர். தற்போது இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி, முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் தமிழ் சினிமாவில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். நடிகை அதிதி ஒரு மருத்துவர்.
ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை அதிதி
தன்னுடைய குறும்புத்தனமான பேச்சாலும், செயலாலும் ‘விருமன்’ படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார். முதல் படத்திலேயே ரசிகர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். இப்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ் என எங்கு பார்த்தாலும் அதிதி வீடியோ தான் இருக்கிறது. தன்னுடைய துறுதுறு குணத்தாலும், பெரிய இயக்குனரின் மகள் என்ற பந்தா இல்லாமல் அனைவரிடம் பழகுவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நடிகை அதிதி ஷங்கர் முறைப்படி நடனத்தையும், இசையையும் பயின்றுள்ளார். ‘விருமன்’ படத்தில் ‘மதுரை வீரன் அழகுல’ பாடலை அதிதி பாடியுள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அதிதி
தற்போது நடிகை அதிதி, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதற்கான பட பூஜை சமீபத்தில் தொடங்கியது. தேசிய விருது வாங்கிய ‘மண்டேலா’ பட இயக்குநர் அஸ்வின் மடோனா இப்படத்தை இயக்குகிறார்.
வைரலாகும் 10ம் வகுப்பு மதிப்பெண்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகை அதிதியின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் நடிகை அதிதி அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண், கணித பாடத்தில் 97 மதிப்பெண்கள் , பிரெஞ்சு பாடத்தில் 97 மதிப்பெண்கள், சமூக அறிவியலில் 91 மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 91 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அடங்கப்பா... அழகு... அறிவு... என பல திறமைகளை கொண்டுள்ளாரே அதிதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil