அந்த நேரத்தில் செத்து விடுவேனோனு நினைத்தேன் - நடிகை அபிராமி வேதனை!

Abhirami Tamil Cinema
By Sumathi Jun 18, 2024 02:30 PM GMT
Report

தான் கடந்து வந்த கசப்பான அனுபவங்களை நடிகை அபிராமி பகிர்ந்துள்ளார்.

நடிகை அபிராமி

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடி எடுத்துவைத்தார்.

actress abhirami

தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனையடுத்து, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.

இதற்கிடையில் ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். 10 ஆண்டுகள் மேல் குழந்தை இல்லை என்பதால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில்,

30 வருஷ பழக்கம்; குழந்தையின்மை - அந்த நடிகரின் டார்ச்சரால் விலகிய நடிகை அபிராமி!

30 வருஷ பழக்கம்; குழந்தையின்மை - அந்த நடிகரின் டார்ச்சரால் விலகிய நடிகை அபிராமி!

பாடி ஷேமிங்

“மீடியாவில் இருந்து மட்டுமல்ல, வெளியில் இருந்தும், எனக்கும் பாடி ஷேமிங் நடந்திருக்கிறது. இடையே, எடை கூடி குண்டாகி இருந்தேன். அதை பார்க்கும் சிலர், என்ன இப்படி குண்டாகிவிட்டாய் என்று சர்வ சாதரணமாக கேட்பார்கள். எனக்கு உண்மையில் மனபதற்றம் நிறைய இருந்தது.

அந்த நேரத்தில் செத்து விடுவேனோனு நினைத்தேன் - நடிகை அபிராமி வேதனை! | Actres Abhirami About Body Shaming Mental Disorder

அந்த சமயத்தில் எனக்கு ஹிப்னோ தெரபிதான் மிகவும் உதவிகரமாக இருந்தது. இதையும், மருந்துகளையும் வைத்துதான் நான் அதனை கையாண்டேன்.

அந்த நேரத்தில் நான் செத்து விடுவேனோ என்று நினைத்திருக்கிறேன். ஆகையால் மனநல பிரச்சினைகளுக்காக மருத்துவ உதவி எடுத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.