அதுக்காக கூப்பிட்டா நோ சொல்ல மாட்டேன் - நடிகை அபிராமி பளிச்..!

Kamal Haasan Abhirami Viruman
By Karthick Jan 06, 2024 04:01 PM GMT
Report

நடிகை அபிராமி தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து வருகின்றார்.

அபிராமி

தமிழ் சினிமாவில் விருமாண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

actress-abirami-says-she-wont-say-no-if-asked

அதன்பிறகு தமிழில், வானவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர் தான் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த விருமாண்டி படம் இவருக்கு பேர் வாங்கி கொடுத்தது.

ஓகே சொல்லுவேன்

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை அபிராமி விருமாண்டி 2 குறித்து கருத்து தெரிவித்துள்ளார். விருமாண்டி திரைப்படம் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் நீங்கள் நடிப்பீர்களா என கேட்டபோது, விருமாண்டி திரைப்படத்தைப் பொறுத்தவரை அதில் அன்னலட்சுமி இறந்துவிட்டாள் ஆனால்,

actress-abirami-says-she-wont-say-no-if-asked

இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் நான் எப்படி நடிக்க முடியும் என்று கேள்வியை எழுப்பிய அபிராமி, ஒரு வேளை கமலஹாசன் மீண்டும் இந்த திரைப்படத்தை எடுத்தால், அவர் என்னை அழைத்தால் நான் கண்டிப்பாக மறுக்க முடியாது என்றும் கட்டாயம் நடிப்பேன் என தெரிவித்தார்.