தம்பியின் முகநூல் காதல்.. சம்மதிக்க மறுத்த பெண் வீட்டார் - யோகி பாபு செய்த காரியம்!

Tamil Cinema Yogi Babu Marriage Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 07, 2024 12:17 PM GMT
Report

நடிகர் யோகிபாபுவின் சகோதரனுக்கு எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

யோகி பாபு

தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது உடன் பிறந்த தம்பி விஜயன் சினிமா இயக்குநராகும் ஆசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்.

தம்பியின் முகநூல் காதல்.. சம்மதிக்க மறுத்த பெண் வீட்டார் - யோகி பாபு செய்த காரியம்! | Actor Yogi Babu S Brother Love Marriage

இந்நிலையில் விஜயனின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் தொடர்பாக யோகி பாபுவின் நட்பு வட்டத்திலிருந்து கிடைத்த தகவலில், விஜயனுக்கு சில வருடங்களுக்கு முன் மைசூரை சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

20 வருஷமா நடிக்கல; வடிவேலுவால் அப்செட்டான அஜித் - படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

20 வருஷமா நடிக்கல; வடிவேலுவால் அப்செட்டான அஜித் - படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

பெற்றோர் சம்மதம் 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், ஆனால், பெண் படுகர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் சம்மதிக்க தயங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், காதலில் தனது தம்பி உறுதியாக இருந்ததால், யோகிபாபுவே நேரடியாக பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு பேசி, அவர்களது சம்மதத்தை வாங்கினாராம்.

தம்பியின் முகநூல் காதல்.. சம்மதிக்க மறுத்த பெண் வீட்டார் - யோகி பாபு செய்த காரியம்! | Actor Yogi Babu S Brother Love Marriage

கடைசியில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.யோகி பாபுவின் சொந்த ஊரான செய்யாறில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான சிலர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.