20 வருஷமா நடிக்கல; வடிவேலுவால் அப்செட்டான அஜித் - படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!
அஜித் - வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாகவே இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது.
அஜித் - வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

நடிகர் அஜித் காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 2000-ம் ஆண்டு வரை நடித்து வந்தார். இவர்கள் இருவரும் ஆசை, மாப்பிள்ளை, ஆனந்த பூங்காற்றே, ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.
ஆனால், அதற்கு பிறகு இருவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்கவில்லை. இதற்கு ராஜா படத்தின் போது ஏற்பட்ட மோதலே காரணம் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
என்ன காரணம்?
ராஜா படத்தில் அஜித்தின் மாமாவாக வடிவேலு நடித்திருப்பார். இதனால் படம் முழுவதும் அஜித்தை போடா வாடா என்றே அழைக்கிறார். ஆனால், படப்பிடிப்பிற்கு பிறகும் அஜித்தை வாடா போடா என்று வடிவேலு அழைத்ததாகவும், அதை அஜித் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநரிடம் அஜித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாராம். உடனடியாக வடிவேலுவிடம் விஷயத்தை இயக்குநர் சொல்லியும், அதை கண்டுகொள்ளாத அவர் மீண்டும் அஜித்தை வாடா போடா என்று பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ராஜா படத்தின் ஷூட்டிங் முடியும் வரை அஜித், வடிவேலுவுடன் சரியாக பேசவில்லை என்றும், பின்னர் வடிவேலுவுடன் படங்களில் நடிக்க நோ சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil