விபத்தில் சிக்கிய நடிகர் விஷால் - துடிதுடித்து விழுந்த பரிதாபம்..!

Vishal Tamil Cinema Accident
1 மாதம் முன்

நடிகர் விஷால் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி துடிதுடித்து விழுந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லத்தி படப்பிடிப்பு 

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், நடிகர் விஷாலின் முதல் பான் இந்தியா படமாக ‘லத்தி’ உருவாகி வருகிறது.

இதில், விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Lathi Movie

இப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் விஷாலின் நண்பர்களான நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது.

துடிதுடித்து கீழே விழுந்த விஷால்

பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஷால்.

இந்நிலையில், தற்போது ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது நடிகர் விஷாலுக்கு காலில் அடி விழ, துடிதுடித்துக் கீழே விழுந்தார்.

Vishal

உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், ‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

‘லத்தி’ படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது முறையாக விஷால் விபத்துக்குள்ளாகி இருப்பது அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வனிதாவை சேர்த்து கொள்வீர்களா..? அருண்விஜய் என்ன சென்னார்?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.