நடிகர் சங்கத் தேர்தல் : விஷாலின் பாண்டவர் அணி வெற்றி முகம்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ம் தேதி ஆண்டு ஜுன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால் தலைமையிலான பண்டவர் அணியும், இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. artiste association தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், அனைத்து இடங்களிலும் தொடர்ந்து பாண்டவர் அணியே முன்னிலை வகித்து வருகிறது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 118, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 347, பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 429 தபால் வாக்குகள் பெற்றுள்ளனர்.
அதேபோல் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் 219, பூச்சி முருகன் 214 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக புகார் தெரிவித்து வந்த ஐசரி கணேஷ் அணியினர், பாண்டவர் அணி முன்னிலை வகிக்கும் தகவல்கள் வெளியானவுடன் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் யார் வெற்றிபெற்றாலும் இன்னும் 3 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என ஔசரி கணேஷ் தெரிவித்திருக்கிறார்.