அரசியல் ஈடுபாடு.. பூத் கமிட்டி விபரங்களில் குளறுபடி - நிர்வாகிகளை அழைத்து எச்சரித்த விஜய்!
நடிகர் விஜய் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டதாக ஆய்வு செய்து விசாரித்துள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். குறிப்பாக அவர் 234 தொகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் அந்த மேடையில் பேசிய நடிகர் விஜய், நாளைய வாக்காளர்களாகிய நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்காமல் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அவரது இந்த பேச்சு கண்டிப்பாக அரசியலுக்கு வர போகிறார் என்பதை தெரியப்படுத்தியது.
பின்னர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அரசியல் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் இவர் இது குறித்து நேரடியாக தெரிவிக்கவில்லை.
எச்சரித்த நடிகர்
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரம் காட்டிவருகின்றனர். பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்புகொண்டு நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பேசி ஆய்வு மேற்கொண்டார்.
பூத் கமிட்டி விவரங்கள் வெளியிடுவதில் குளறி படி ஏற்பட்டுள்ளதை அறிந்த நடிகர் விஜய், தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமாரை எச்சரித்தார்.
பூத் கமிட்டி விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்டக் குளறுபடிகள் காரணமாக செங்கல்பட்டு மக்கள் இயக்க நிர்வாகியையும் நடிகர் விஜய் தொலைபேசி மூலமாக கடுமையாக எச்சரித்துள்ளார் என்று தெரியவந்தது.