Friday, Jul 18, 2025

அரசியல் கட்சியாக மாறும் இயக்கம் - தீவிர ஆலோசனையில் நடிகர் விஜய்

Vijay
By Sumathi 2 years ago
Report

விஜய் மக்கள் இயக்கத்தில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக புஸ்ஸி என்.ஆனந்த் செயல்பட்டு வருகிறார். இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சியாக மாறும் இயக்கம் - தீவிர ஆலோசனையில் நடிகர் விஜய் | Vijay Makkal Iyyakkam Actor Vijay Advice

தொடர்ந்து கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் உறுப்பினர்கள் வெற்றியடைந்தனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

 ஆலோசனை

மேலும் இந்த விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதில், மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய அணி, மகளிர் அணி, இளைஞரணி ஆகியவ நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.