சேச்சி.. சேட்டன்மார்.. கேரளாவில் மலையாளத்தில் பேசி அசத்திய விஜய் - வைரல் Video!
கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தியுள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் G.O.A.T திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை கேரளாவில் நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டார்.

அதன்படி 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் கேரளா சென்றடைந்தார். இதனை அறிந்த கேரள விஜய் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். விஜய் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூடியதால், அவரின் கார் ரசிகர்கள் மத்தியில் தத்தளித்தது. இதையடுத்து அங்கு குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து, நன்றி தெரிவித்தார்.
மலையாள பேச்சு
இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.

அதில், "சேச்சி.. சேட்டன்மார்.. ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று மலையாளத்தில் பேசினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thalapathy Vijay’s Malayalam speech enthrals Kerala folks! Euphoria ?pic.twitter.com/z1AOVdLPtW
— Rajasekar (@sekartweets) March 20, 2024
68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய நடிகர்... யார் இந்த தேசிய விருது பெற்ற நடிகர்னு தெரியுமா? Manithan
புத்தகங்கள் தடுத்து வைப்பு : எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு IBC Tamil
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள் IBC Tamil