சூப்பர்ஸ்டார் விஜய்யா? அப்படிலாம் இல்ல - வெங்கட் பிரபு ஓபன் டாக்
தற்போது சூப்பர்ஸ்டார் விஜய்யா? அல்லது ரஜினியா? என்ற பிரச்சனை பெரிதாக இருக்கும் நிலையில், அது குறித்து வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
தளபதி 68
விஜய்யின் அடுத்த படமான அவரின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை Ags நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கி வேகமாக நடைபெற்று வருகின்றது.

படத்தின் Pre -Production பணிகளில் வெங்கட் பிரபு மும்முரமாக இருந்து வரும் நிலையில், அண்மையில் அவரை சந்தித்த செய்தியாளர்கள் சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர்.
விஜய் எப்பவுமே தளபதி தான்
இந்த படம் அரசியல் படமாக இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்த படம் அரசியல் படம் இல்லை. மிகச்சிறந்த எண்டர்டெயினராக இருக்கும்” எனக் கூறினார்.

மேலும், இந்த படத்தில் விஜய்க்கு படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்று டைட்டில் போடுவீர்களா?” என்று கேட்டனர்.அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு “இல்லை. அவர் எப்போதும் எனக்கு தளபதிதான். அதனால் அவருக்கு தளபதி என்றுதான் டைட்டில் போடுவோம் என பதிலளித்து சென்றார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil