தேதியை அறிவித்த தவெக தலைவர் விஜய் - சூடுபிடிக்கும் அரசியல் களம்!
ஆக.22ஆம் தேதி கட்சிக் கொடியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார்.
தலைவர் விஜய்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.
இந்நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டைமதுரை,திருச்சி,சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநாட்டுக்கான இடம் தேடும் பணி நடைபெற்றது.
இதையடுத்து, தற்போது விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பல ஏக்கர் காலி இடத்தை புஸ்ஸி என்.ஆனந்த் தேர்வு செய்திருப்பதாகவும் அங்கு செப்.22-ம் தேதிமாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் முதல் நிகழ்வு - ஜூன் 28'இல் களமிறங்கும் தலைவர் விஜய் - அதிரடியாக அறிவித்த பொதுச்செயலாளர் ஆனந்த்!!
கட்சிக் கொடி
பொதுவாக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து பதிவு செய்திருந்தால் மட்டுமே போட்டியிட முடியும் . இந்த நிலையில் ஆக.22ஆம் தேதி கட்சிக் கொடியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்அறிமுகம் செய்கிறார்.
மேலும் இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது .கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.