கட்சியின் முதல் நிகழ்வு - ஜூன் 28'இல் களமிறங்கும் தலைவர் விஜய் - அதிரடியாக அறிவித்த பொதுச்செயலாளர் ஆனந்த்!!
கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் முதல் நிகழ்வாக 10, 12 மாணவர்களுக்கு பரிசளிக்கவுள்ளார்.
விஐய் பாராட்டு விழா
கடந்த ஆண்டு 10 - 12ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, 234 தொகுதிகள் தோறும் முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை தேர்வு செய்து பரிசளித்து பாராட்டினார் நடிகரான விஜய்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், இந்த ஆண்டு பரிசளிப்பு விழா நடத்துவர் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் “தளபதி விஜய்” அவர்கள், 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த "10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்" வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் “தமிழக வெற்றிக் கழகம்” சார்பாகப் பாராட்ட உள்ளார்.
முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.
Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/24XLTXJCcj
— N Anand (@BussyAnand) June 10, 2024
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். "தளபதி விஜய்” அவர்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.