அதிரும் அரசியல் களம்..திடீரென நா.த.க - வி.சி.க குறித்து பரபரப்பு அறிக்கை - த.வெ.க தலைவர் விஜய்!
18-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த போது, நாம் தமிழர் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இந்த சூழலில் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரு கட்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அப்பதிவு வருமாறு,
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

— TVK Vijay (@tvkvijayhq) June 7, 2024
மத்தியில் தனிபெருபான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி முறையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.தற்போது நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக ஒருமனதாக மோடி தேர்வாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.