காதல் தோல்வி நிறைய நடந்திருக்கு - பளீச்சென கூறிய தளபதி விஜய்!
காதல் தோல்வி குறித்து விஜய் பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகின்றார். இதில், சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர்.
காதல் தோல்வி
அண்மையில், படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி படு வைரலானது. ஜூன் மாதம் அநேகமாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஒரு பாடலை இளையராஜா மற்றும் விஜய் இணைந்து பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த போது விஜய்யை பேட்டி எடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஆரம்பத்தில் நீங்க நிறைய லவ் படமாக நடித்தீர்கள். மேலும் லவ் டுடே, ஷாஜகான் போன்ற காதல் தோல்வி படங்களிலும் நடித்துளீர்கள்.
எனவே நிஜ வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா என சிவகார்த்திகேயன் கேட்க, விஜய்யும் நிறைய நடந்திருக்கு என ஜாலியாக கூறியுள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil