அம்மா.. நான் தான் விஜய்..! அடையாளம் தெரியாமல் சென்ற மூதாட்டி - வைரலாகும் கியூட் Video!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
நடிகர் விஜய்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் இன்று நேரில் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் அனைவருக்கு வரிசையாக நிவாரண பொருட்கள் வழங்கினார். அப்போது நிவாரண பொருளை வாங்க வந்த மூதாட்டி ஒருவர், கைகூப்பிய படியே விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அவரை தாண்டிப்போய் அங்கு நின்றவர்கள் அனைவரது முகத்தையும் உற்றுப் பார்த்தார்.
கியூட் வீடியோ
இதனை கண்டு சிரித்தபடியே விஜய் அந்த மூதாட்டியை அழைத்து, "நான்தான் விஜய்.. நான்தாம்மா விஜய்" என்பது போலா சிரித்தபடியே அந்த மூதாட்டியிடம் கூறினார்.
உடனே அந்த மூதாட்டி கையெடுத்து கும்பிட்டு நிவாரண பொருளை பெற்று விஜய் கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டு சென்றார். இது அங்கிருந்தோரை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், விஜய் தாடி எடுத்திருப்பதால் மூதாட்டிக்கு அடையாளம் தெரியவில்லை போல என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Cute ❣️ #ThalapathyVijay ?#NellaiWelcomesTHALAPATHY #VijayMakkalIyakkam pic.twitter.com/BCb3IdPwyt
— Jiyath (@Jiyath__M) December 30, 2023

பிரதமர் அலுவலக வாகன விற்பனை முறைகேடு : சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மருத்துவருக்கு நேர்ந்த கதி IBC Tamil

ரணிலிடம் 800 மில்லியன் வாங்கிய சாணக்கியன் - என்ன நடந்தது: அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி. IBC Tamil
