நான் ஒன்னும் துணி போடாம வரல; அவரு தாலாட்டி, ஊட்டல - மெளனம் கலைத்த வடிவேலு
நடிகர் வடிவேலு அளித்துள்ள பேட்டி ஒன்று கவனம் பெற்றுள்ளது.
நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு தனது காமெடி திறமைக்காக பிரபலமானாலும், அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிய வண்ணம் இருந்தார். தொடர்ந்து அவருடன் நடித்த சக நடிகர்கள் அளித்த பேட்டியின் மூலம் நெகட்டிவ் இமேஜை பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இதற்கிடையில் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெறவில்லை. பின், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிக்க மறுத்தார்.
அதனால் தயாரிப்பாளர் சங்கத்திடம் ரெட் கார்டை பெற்றார். சிறு இடைவேளைக்கு பின் மாமன்னன் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால், காமெடியில் அவரால் இன்னும் கம்பேக் கொடுக்கமுடியவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலு அளித்துள்ள சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ”ராசாவின் மனதிலே படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தவர் ராஜ்கிரண். அந்த திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளாக என்னை வாழ வைத்தார். தேவர்மகன் படம் நடிக்கிற வரைக்கும் ராஜ்கிரண் சார் அலுவலகத்தில் தான் தங்கி இருந்தேன்.
வைரல் பேட்டி
அவரிடமிருந்து எனக்கு எதுவும் சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் நான் அவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகிக் கொள்கிறேன் என்று வெளியே கிளம்பி வந்தேன். ராஜ்கிரண் தான் எனக்கு கடவுள். அவர்தான் எனக்கு அச்சாரம் போட்டார். அதற்கு பிறகு நான் இவ்வளவு வளர்ந்து வருகிறேன் என்றால் என்னுடைய முயற்சியும் இருக்கிறது.
நான் ஊரில் இருந்து வரும்போது வேட்டி சட்டையோடு தான் வந்தேன். அம்மணமாக வரவில்லை ஆனால் சிலர் பேசும்போது வேட்டி சட்டை, டவுசர் வாங்கி கொடுத்தாரு, தாலாட்டுனாரு, ஊட்டுனாரு என்றெல்லாம் சொல்லுறாங்க, அப்படி கிடையாது. அதுபோல விவேக் இறப்புக்கு நான் போகலன்னு கூட சிலர் பேசுறாங்க..
நான் விவேக் சாரின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடம் வருத்தம் தெரிவித்து விட்டு தான் வந்தேன். இது எல்லாம் வெளியே தெரியாது. ஆனால் சிலர் வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் பேசிக்கொண்டு திரிகிறாங்க” என தெரிவித்துள்ளார்.