தள்ளாடும் நிலையில் 'கிழக்கே போகும் ரயில்' ஹீரோ - இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath May 24, 2024 09:46 AM GMT
Report

'கிழக்கே போகும் ரயில்' பட நடிகர் சுதாகரின் தற்போதைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

நடிகர சுதாகர் 

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியான "கிழக்கே போகும் ரயில்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சுதாகர். இந்த படம் அப்போது 375 நாட்கள் வரை திரையரங்குகள் ஓடியது.

தள்ளாடும் நிலையில்

சுதாகர் ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு என இதுவரை 600 படங்களில் அவர் நடித்துள்ளார். இப்படி பல படங்களில் நடித்து வந்த அவரை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவில் பார்க்க முடியவில்லை.

விஜயகாந்தா.. அப்போ வாய்ப்பு இல்ல; வடிவேலுவ எட்டி மிதிச்சிருப்பேன் - விளாசிய நடிகர்!

விஜயகாந்தா.. அப்போ வாய்ப்பு இல்ல; வடிவேலுவ எட்டி மிதிச்சிருப்பேன் - விளாசிய நடிகர்!

டிவி நிகழ்ச்சி 

இந்நிலையில் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சுதாகர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் சுதாகர் முதுமையான தோற்றத்தில் அடையாளமே தெரியாத அளவிற்கு தள்ளாடும் நிலைமையில் இருந்தார்.

தள்ளாடும் நிலையில்

இதனால், ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு "அந்த காலத்தில் அவ்வளவு பிரபலமாக இருந்தவர் தற்போது முதுமையால் இப்படி மாறிவிட்டாரே" என்று பதிவிட்டு வருகின்றனர்.