ஹீரோவாக புகழ்.. 'தோனி' பெயரில் டைட்டில் - போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Tamil Cinema Pugazh Tamil Actors Tamil Actress
By Jiyath Mar 25, 2024 09:35 AM GMT
Report

நடிகர் புகழ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

நடிகர் புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் புகழ். குறிப்பாக 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமாக்கியது. இதனையடுத்து பல திரைப்படங்களில் புகழ் நடித்து வருகிறார்.

ஹீரோவாக புகழ்..

சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த அவர், 'ஆகஸ்ட் 16 1947' என்ற படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

நோயோடு சிரமம் - படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா!

நோயோடு சிரமம் - படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா!

டைமண்ட் தோனி

இதனை தொடர்ந்து 'மிஸ்டர் ஜு கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது 'டைமண்ட் தோனி' என்ற படத்திலும் புகழ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜோஜின் ஜோனி என்பவர் இயக்குகிறார்.

ஹீரோவாக புகழ்..

மேலும், அபிஷேக் என்பவர் இசையமைக்கிறார். டைமண்ட் தோனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.