வடிவேலு பண்ண கூத்து; கல்லால அடிச்சு கொல்லுவாங்க - உண்மையை உடைத்த சிங்கமுத்து!

Tamil Cinema Vadivelu Actors Tamil Actors Tamil Actress
By Jiyath May 30, 2024 01:26 PM GMT
Report

நடிகர் வடிவேலு குறித்து அவருடன் பல படங்களில் நடித்த நடிகர் சிங்கமுத்து பேசியுள்ளார். 

நடிகர் வடிவேலு

வைகைப்புயல் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் வடிவேலு, காமெடியனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

வடிவேலு பண்ண கூத்து; கல்லால அடிச்சு கொல்லுவாங்க - உண்மையை உடைத்த சிங்கமுத்து! | Actor Singamuthu Talks About Actor Vadivelu

தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார். மாமன்னன் படத்தில் இவரின் மாறுபட்ட சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது. ஆனால் சமீப காலங்களில் அவருடன் நடித்த துணை நடிகர்களின் நேர்காணல்களால், வடிவேலு பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

சிம்பிளாக நடந்த இரண்டாம் திருமணம் - நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் வைரல்!

சிம்பிளாக நடந்த இரண்டாம் திருமணம் - நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் வைரல்!

சிங்கமுத்து 

அந்தவகையில் அவருடன் பல படங்களை நடித்த நடிகர் சிங்கமுத்து வடிவேலு குறித்து கூறுகையில் "திரைத்துறையில் எல்லாருக்கும் தெரியிறத விட என்னை விட வடிவேலுவை தெரிஞ்சவன் யாரு. நான் அவரப்பத்தி கால்வாசி கூட சொல்லலையே இன்னும்.

வடிவேலு பண்ண கூத்து; கல்லால அடிச்சு கொல்லுவாங்க - உண்மையை உடைத்த சிங்கமுத்து! | Actor Singamuthu Talks About Actor Vadivelu 

சொன்னா.. துபாய் போன்ற நாடுகளா இருந்தா கல்லெடுத்து அடிச்சு கொன்றுவாங்க. அப்படியெல்லாம் அவரு தப்பு பண்ணுவாரு. நீ (வடிவேலு) ஆரம்பத்துல பண்ண கூத்தெல்லாம் உனக்கு மட்டும் தான் தெரியும்.. எனக்கு தெரியும்.

உலகத்துலயே எல்லா நடிகரும் கெட்டுப்போயிரணும், தான் மட்டுமே நடிக்கணும்னு நினைக்கிற ஆளு வடிவேலு. பொய் சொல்லி ஒரு ஆளைப்பற்றி வதந்தியை கிளப்பி விட்டுருவாரு" என்று விளாசியுள்ளார்.