அப்போதான் கல்யாணம் செஞ்சிப்பேன் - நச்சுனு பதில் சொன்ன நடிகர் சிம்பு!
நடிகர் சிம்பு திருமணம் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், நேர்காணலில் நடிகர் சிலம்பரசன் தனது திருமணம் குறித்து பேசிய வீடியோ ஒன்றை நடிகர் பிரேம்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இனி யாராச்சும் கல்யாணத்தை பத்தி கேப்பீங்க என கேப்ஷனும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம்
அதில், இப்ப வயசானவங்க கிழவங்க 50, 60 வயசுல செத்துடறாங்க. அப்போ அந்த வயசுல இருக்கறவங்க, ஏன் இன்னும் நீ உயிரோடு இருக்கறேன்னு நாம யாரையாச்சும் கேக்கிறோமா, எங்களை மட்டும் எதுக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையான்னு கேக்கறீங்க.

உன் வயசுல இருக்கறவங்க எல்லாம் போயிட்டாங்க, நீ என் இன்னும் இருக்கறேன்னா சொல்ல முடியும்? ஏண்டா டேய், அவனவனுக்கு எப்போ டைம் வருதோ, அப்போதாண்டா போக முடியும்.
அதே மாதிரி அவனவனுக்கு எப்போ டைம் வருதோ அப்பதாண்டா கல்யாணம் பண்ணிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil