2வது திருமணத்திற்கு ரெடியான பிரசாந்த்? பிரபலம் உடைத்த தகவல்!
பிரசாந்த் 2வது திருமணம் குறித்து பிரபலம் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசாந்த்
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தார்.
இவர் 1990 -ம் ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் சமீப காலமாக திடீரென பட வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார்.
இடைவெளிக்கு பின்னர் பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். அது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன்பின் அந்தகன் படத்தில் நடித்துள்ளார். தற்போது, விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
2 மாதம் கூட நீடிக்காத முதல் திருமணம் - பிரிய இப்படி ஒரு காரணமா..? 51 வயதில் டாப் ஸ்டாருக்கு 2-வது திருமணம்..!
2வது திருமணம்
ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மூத்த பத்திரிக்கையாளரான சுபைர், பிரசாந்தின் திருமணவாழ்க்கை சரியாக அமையவில்லை என்ற வருத்தம் தியாகராஜனுக்கு இருக்கு.
பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் தான். கல்யாணம் ஆனபிறகு சில விஷயங்கள் தெரியவர, முறைப்படி நீதிமன்றம் சென்று, விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது பிரசாந்த், தனியாகத்தான் இருக்கிறார்.
அவருக்கு வயசு இருப்பதால், நிச்சயம் இரண்டாம் திருமணம் செய்து கொள்வார். அவருக்கு என்று ஒரு குடும்பம் நிச்சயம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.