சிறுநீரை 15 நாட்கள் குடித்ததால் நடந்த அற்புதம் - பிரபல நடிகர் பகீர் தகவல்
நடிகர் பரேஷ் ராவல் சிறுநீரை குடித்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் பரேஷ் ராவல்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சுரரைப் போற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் பரேஷ் ராவல். பாலிவுட், தெலுங்கு, குஜராத்தி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் வெளியான கடக் படத்தில் நடித்தபோது கீழே விழுந்ததில் முழங்காலில் அடிபட்டது. உடனே செட்டில் இருந்த நடிகர்கள் டேனி டென்ஜொங்பா, டின்னு ஆனந்த் ஆகியோர் பரேஷ் ராவலை மும்பையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் தகவல் பகிர்ந்துள்ள அவர், நான் நானாவதி மருத்துவமனையில் இருந்தபோது வீரு தேவ்கன் சார் வந்தார். என்ன ஆச்சு என கேட்டார். கீழே விழுந்துவிட்டேன் சார் என்றேன். நான் ஒன்னு சொல்லுவேன் அதை செய்வியா என கேட்டார்.
சிறுநீரால் அற்புதம்
சொல்லுங்க சார், கண்டிப்பாக செய்கிறேன் என்றேன். காலையில் எழுந்த பிறகு வரும் சிறுநீரை குடிக்கவும். அப்படி குடித்தால் உடம்புக்கு நல்லது. எந்த பிரச்சனையும் வராது என்றார். நான் அந்த நேரத்தில் மது அருந்தக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது. காலையில் எழுந்ததும் கழிக்கும் சிறுநீரை குடி என்றார்.
Ewww!
— Adheesh T (@Ad_Tel_210168) April 27, 2025
Veeru Devgan probably just played a prank & Paresh Rawal really started drinking his own urine!
He says: All fighters do it.
Ask any martial arts practitioner / kushti / kalari fighter.
NO ONE in his senses drinks his own urine to keep fighting fit.
What do you say @grok? pic.twitter.com/WqiKKvemgK
மறுநாள் காலை சிறுநீரை குடிக்க தயாரானேன்.சிறுநீரை குடித்தால் ஒரே மடக்கில் இல்லாமல் பீர் மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக சிப் செய்து குடிக்க முடிவு செய்தேன். 15 நாட்கள் கழித்து என் எக்ஸ்ரேயை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். என் காயம் குணமடையத் துவங்கிவிட்டது.
அந்த காயம் சரியாக இரண்டரை மாதங்கள் ஆகும் என்றார்கள். ஆனால் நான் சிறுநீர் குடித்ததால் ஒன்றரை மாதத்தில் குணமாகி வேலைக்கு சென்றுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.