மாணவர்களை மது குடிக்க வைத்த ஆசிரியர் - அரசு பள்ளியில் பகீர் சம்பவம்
ஆசிரியர் ஒருவர் மாணவர்களை மது குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் செயல்
மத்தியப் பிரதேசம், கட்னி மாவட்டத்தில் கிர்ஹானி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் என்பவர் மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், ஒரு நபர் ஒரு அறையில் உள்ள சிறுவர்களுக்கு கப்-களில் மதுபானங்களை கொடுக்கிறார். மேலும் அவர்களில் ஒருவரிடம் மதுபானத்தில் தண்ணீர் கலந்து குடிக்கச் சொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
அதிகாரிகள் நடவடிக்கை
இது சர்ச்சையாக வெடித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் யாதவ், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரி ஓ.பி. சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோ பல்வேறு தொகுதி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் என அடையாளம் காணப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.