நான் மட்டும் காரணம் இல்ல.. நடிகை சமந்தா உடனான விவாகரத்து -நாக சைதன்யா உடைத்த சீக்ரெட்!
நடிகை சமந்தா உடனான விவாகரத்து குறித்து நடிகர் நாக சைதன்யா பதில் அளித்துள்ளார்.
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி நடிகை சோபிதா துலிபாலாவை 2ஆவதாகத் திருமணம் செய்து செய்துகொண்டார். இந்த நிலையில் நாக சைதன்யா-சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் தண்டேல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விவாகரத்து
இந்த சூழலில் நடிகை சமந்தா உடனான விவாகரத்து குறித்து நடிகர் நாக சைதன்யா பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: “நானும் சமந்தாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்தோம். இருவருமே ஒருவருக்கொருவரை மதிக்கிறோம்.
ஆனால் ஏன் என்னைக் குற்றவாளியைப் போல் பார்க்கிறீர்கள். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன். ஏனெனில் அதன் பின்விளைவுகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இது இருவரும் இணைந்து எடுத்த பரஸ்பர முடிவு என்று தெரிவித்துள்ளார்.