தப்பு பண்ணிட்டாங்க.. 4 மணிநேரம் தான் டைம், துணிய உறுவிடுவேன் - மன்சூர் எச்சரிக்கை!
நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை குறித்து பதிலளித்துள்ளார்.
ஆபாச பேச்சு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார், படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவர் பேசியதற்கு பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு" என்று காட்டமாக பதிலளித்தார்.
எச்சரிக்கை
இந்நிலையில், நடிகர் மன்சூருக்கு கண்டனம் தெரிவித்த சங்கம் அனைவர் முன்னரும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நோடீஸ் அனுப்பியது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், "நான் பேசியதை தவறாக கட் செய்து போட்டு இருக்கிறார்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என நல்லவிதமாக தான் நான் பேசினேன். நடிகர் சங்கம் இப்போது மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.
இது போன்று ஒரு வீடியோ வந்து இருக்கிறது என என்னை கேள்வி கேட்கலாம். ஆனால் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. போன் செய்யவில்லை, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கணும். அனைவரும் முன்பும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார்கள். நான் மன்னிப்பு கேட்கும் ஜாதியா. நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலாய தவறு செய்துவிட்டது.
வேண்டாம் அமைதியாக இருக்கிறேன். எரிமலையாக மாறினால் துண்டு காணும் துணிய காணும் கோமணம் உருவி அனுப்பிடுவேன். நடிகர் சங்கம் 4 மணி நேரத்தில் கொடுத்த அறிக்கையை வாபஸ் வாங்க வேண்டும். மக்களுக்கு என்ன பற்றி தெரியும். தமிழ்நாடே என் பின்னால் உள்ளது. நான் என்ன அனாதை பிணமாக தெரிகிறேனா" என்று பேசியுள்ளார்.