'ஆசையா இருந்துச்சு' - த்ரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு - லோகேஷ் கண்டனம்!

Trisha Tamil Cinema Lokesh Kanagaraj Mansoor Ali Khan Leo
By Jiyath Nov 19, 2023 05:18 AM GMT
Report

நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மன்சூர் அலிகான் சர்ச்சை

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வாஸூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கற்பழிக்கவே விடமாட்டுகிறார்கள். எனக்கும் மிக ஆசையாக இருந்தது. லியோ படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

அவ்வளவு அழகான த்ரிஷாவுடன் வில்லனாகிய எனக்கு எப்படியும் ஒரு படுக்கையறை காட்சி இருக்கும். அவரை அப்படியே மெத்தையில் போட்டு ரேப் செய்வதை போல எனக்கு காட்சி இருக்கும் என கொச்சையாக பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தன்னை குறித்த மன்சூர் அலிகானின் பேச்சுக்கு, நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்து அவரின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அஜித் வேணும்னே அப்படி பண்ணாரு; அதை அப்படியே சொன்னாரு - நடிகை சைத்ரா வெளிப்படை!

அஜித் வேணும்னே அப்படி பண்ணாரு; அதை அப்படியே சொன்னாரு - நடிகை சைத்ரா வெளிப்படை!

லோகேஷ் கனகராஜ் கண்டனம்

அந்த பதிவில் "மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரது பேச்சுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும்.

ஆனால் அவரை போன்ற ஒரு கேவலமான மனிதருடன் நான் இணைந்து நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் த்ரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லியோ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது "மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியிருப்பது எனக்கு மிகவும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே அணியாக பணியாற்றி இருக்கிறோம். அனைத்து துறைகளிலும் பெண்கள், சக பணியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும். இந்த நடத்தையை நான் முற்றிலுமாக கண்டிக்கிறேன்' என பதிவிட்டிருந்தார்.