சூப்பர் ஸ்டார் விவகாரம்; ரஜினியின் அன்புக்கு நான் அடிமை.. - விஜய் சொன்ன டாப் சீக்ரெட்!

Rajinikanth Vijay Tamil Cinema Tamil Actors
By Jiyath Nov 14, 2023 03:00 PM GMT
Report

தான் எவ்வளவு தீவிரமான ரஜினிகாந்த் ரசிகர் என்பதை குறித்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.

ரஜினி-விஜய்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களாகவும் இருவரும் இருந்து வருகின்றனர். சமீப காலமாக சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் தமிழ் திரையுலகில் பேசு பொருளாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் விவகாரம்; ரஜினியின் அன்புக்கு நான் அடிமை.. - விஜய் சொன்ன டாப் சீக்ரெட்! | Actor Vijay About Rajinikanth In Old Interview

நடிகர்கள் அமைதியாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்களின் சண்டை இணையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனையடுத்து சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தன் என்று கூறி அந்த விவகாரத்திற்கு லியோ திரைப்பட வெற்றி விழாவில் விஜய் முற்றுப்புள்ளி வைத்தார். அதுமட்டுமல்லாமல் 'நான் ஒரு தீவிரமான" ரஜினி ரசிகர் என்பதை நடிகர் விஜய்யே பல மேடைகளிலும், பேட்டிகளும் கூறியுள்ளார்.

விஜய் பேட்டி

அந்தவகையில் ரஜினிகாந்த் குறித்து நடிகர் விஜய் அளித்த பழைய பேட்டி ஒன்றில் கூறியதாவது "நான் சின்ன வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன், வாரத்துல நாலு நாள் ஸ்கூலுக்கு போனேன் என்றால் மூனு நாள் ரஜினியின் படம் பார்த்துட்டு இருப்பேன்.

சூப்பர் ஸ்டார் விவகாரம்; ரஜினியின் அன்புக்கு நான் அடிமை.. - விஜய் சொன்ன டாப் சீக்ரெட்! | Actor Vijay About Rajinikanth In Old Interview

அப்போது எனக்கு 5 வயது. ரஜினியின் அன்புக்கு நான் அடிமை படம் ரிலீஸானது. எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் பள்ளியை கட் அடித்துவிட்டு செல்லும் வயது இல்லை.

அதனால் அப்பா ஷூட்டிங் போனதும் அம்மாவிடம் ரொம்ப அடம் பிடிச்சு மேட்னி ஷோவுக்கு போனேன். அந்த ஷோவை பார்த்து முடிச்சிட்டு வெளியே வந்ததும் அம்மாட்டா இன்னொரு தடவை பார்க்கணும்னு அடம் பிடித்தேன். ஆனால் என்னை அம்மா ஒரு போடு போட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க" என்று விஜய் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.